வாழை இலையில்,
சரியும், மழைத் துளிகளென, விழுந்து உடையும், வியா்வைப் பொட்டுகள்.. கிடார் கலைஞனின், அதிர்வற்ற, இசை நரம்பென, இதயத் துடிப்பு.. வளை கையில், வலக்கரம் கோர்க்க, இடி, மின்னலுக்கு, பயந்து ஒளியும், குழந்தையென, வெட்கம்.. சிலிர்ப்பின் அர்த்தத்தை, உணா்ந்தபடி, முழுநிலவை, மூடிமறைக்கும், மேகமென கேசம்.. சரியாக வாசிக்கப்படா, புல்லாங்குழலின் நாதமென, உதடு துடிப்பு.. இதோ.. இதோ.. இந்த, கீழ்வானச் சிகப்பை, உணா்த்தும் இதழ்களில் உட்காரத் துடித்தபடி, இரைந்து, கரைந்துக்கொண்டிருந்தது, இதழ் தின்னும் பறவையொன்று...!!! ராஜசேகரன்
தலைநிமிர்த்தி, பார்க்க வேண்டிய.. வெட்க வானவில்... நீ..! விடுமுறை நாட்கள் எல்லாம், 'விடும் முறை' நாள் தான் உன் வெட்கத்திற்கு...!! நீ உதடு சுழித்து வெட்கப்பட்டாய்.. வெட்கம் வழிந்து கோலமிட்டது....! உன் வெட்கக்குழந்தையை, வெளிவாராமல் அடைக்காக்கிறது.. உந்தன் காதல் கரங்கள்...!! அள்ளி அள்ளிக் கொடுக்கும், அட்சயப்பாத்திரம் கூட, சமயங்களில் தோற்பது உண்டு, நீ அள்ளி அள்ளிக் கொடுக்கும், வெட்கத்தின் முன்பு...!! இத்தனை முறை வெட்கப்பட்டும், இன்னும் குறையாமல் உள்ளது.. உன் வெட்க வங்கி கணக்கு...!!! வெட்கத்தை மட்டுமே, எத்தனை முறை தான் அணைத்துக் கொள்வாய்...?? வெட்கமே வெட்கப்படுகிறது..! என்னையும் கொஞ்சம் அணைக்கவிடேன்...!! உன் நாண மலர்களை கொய்து, இதழ் பா(சே)ர்க்க ஆசை தான்... ஆனால் மலா்களை கொய்வதிலே.. என் முழுக்கவனமும் சிதறுவதால்.... எங்கே உன் இதழ் பா(சே)ர்ப்பது...???!!
வெட்கம் ?
************
உந்தன் விரல் தொடும் சாக்கில்
லேசாக கரம் நுழைப்பேனே
உடனே சட்டென்று பின்னுக்கு
இழுத்து
உதடு சுழித்து புன்னகை சிந்துவாயே
அதுவா ?
யாருமற்ற வேலைகளில் உன் இடை தொடும் வளையலில் என் விரல் படும் சமயம் உனைமறந்து என் கரத்தினையும் சேர்த்து முகம் மறைப்பாயே அதுவா ? மழைக்கு முன்பு வரும் மண்வாசனை போல உனை சீண்டும் சமயம் கன்னம் இரண்டும் சிவப்பு பூசுமே அதுவா ? இதில் எதுவாயினும் அது அது தான் ஒளிபுகா மொட்டுக்குள்ளே உட்புகும் மழைநீரைப்போல உன்னிலிருந்தே உருவாகும் அது வெட்கமே தான் !
----> கவிதைகளின் நாயகன் (ம.ராஜசேகரன்)
எத்தனை முறை
எழுதி எழுதித் தீா்த்தாலும்
நித்தம் நித்தம்
புதிதாய் வெளிச்சமூட்டும்
நிலவும், மழையும் போல்
நின் அழகு
----> கவிதைகளின் நாயகன் (ம.ராஜசேகரன்)
கடற்கரையில்
வெகுநேரம் விளையாடிய
குழந்தை
போனால் போகட்டுமென
விட்டுச்சென்றது
பெருங்கடலை !
----> கவிதைகளின் நாயகன் (ம.ராஜசேகரன்)
குழந்தை கட்டும்
கடற்கரை மணல்வீட்டில்
நிரந்தரமாக வசித்திடவே
வந்து வந்து கரைத்தொடுகிறது
கடலலை !
----> கவிதைகளின் நாயகன் (ம.ராஜசேகரன்)