child

child

Wednesday, August 28, 2013

முத்த யட்சன்..!


வாழை இலையில்,
சரியும்,
மழைத் துளிகளென,
விழுந்து உடையும்,
வியா்வைப் பொட்டுகள்..

கிடார் கலைஞனின்,
அதிர்வற்ற,
இசை நரம்பென,
இதயத் துடிப்பு..

வளை கையில்,
வலக்கரம் கோர்க்க,
இடி, மின்னலுக்கு,
பயந்து ஒளியும்,
குழந்தையென,
வெட்கம்..

சிலிர்ப்பின் அர்த்தத்தை,
உணா்ந்தபடி,
முழுநிலவை,
மூடிமறைக்கும்,
மேகமென கேசம்..

சரியாக வாசிக்கப்படா,
புல்லாங்குழலின்
நாதமென,
உதடு துடிப்பு..

இதோ..

இதோ..

இந்த,
கீழ்வானச் சிகப்பை,
உணா்த்தும் இதழ்களில்
உட்காரத் துடித்தபடி,
இரைந்து, கரைந்துக்கொண்டிருந்தது,
இதழ் தின்னும் பறவையொன்று...!!!

 ராஜசேகரன் 

Tuesday, August 20, 2013

வெட்கம்

தலைநிமிர்த்தி,
பார்க்க வேண்டிய..
வெட்க வானவில்...
நீ..! 

விடுமுறை நாட்கள் எல்லாம்,
'விடும் முறை' நாள் தான்
உன் வெட்கத்திற்கு...!! 

நீ உதடு சுழித்து வெட்கப்பட்டாய்..
வெட்கம் வழிந்து கோலமிட்டது....! 

உன் வெட்கக்குழந்தையை,
வெளிவாராமல் அடைக்காக்கிறது..
உந்தன் காதல் கரங்கள்...!! 

அள்ளி அள்ளிக் கொடுக்கும்,
அட்சயப்பாத்திரம் கூட,
சமயங்களில் தோற்பது உண்டு,
நீ அள்ளி அள்ளிக் கொடுக்கும்,
வெட்கத்தின் முன்பு...!! 

இத்தனை முறை வெட்கப்பட்டும்,
இன்னும் குறையாமல் உள்ளது..
உன் வெட்க வங்கி கணக்கு...!!! 

வெட்கத்தை மட்டுமே,
எத்தனை முறை தான்
அணைத்துக் கொள்வாய்...??
வெட்கமே வெட்கப்படுகிறது..!
என்னையும் கொஞ்சம் அணைக்கவிடேன்...!! 

உன் நாண மலர்களை கொய்து,
இதழ் பா(சே)ர்க்க ஆசை தான்...
ஆனால் மலா்களை கொய்வதிலே..
என் முழுக்கவனமும் சிதறுவதால்....
எங்கே உன் இதழ் பா(சே)ர்ப்பது...???!!  


Monday, August 19, 2013

வெட்கம் ?

வெட்கம் ?
************

உந்தன் விரல் தொடும் சாக்கில்
லேசாக கரம் நுழைப்பேனே
உடனே சட்டென்று பின்னுக்கு 
இழுத்து 
உதடு சுழித்து புன்னகை சிந்துவாயே
அதுவா ?

யாருமற்ற வேலைகளில்
உன் இடை தொடும் வளையலில்
என் விரல் படும் சமயம்
உனைமறந்து
என் கரத்தினையும் சேர்த்து
முகம் மறைப்பாயே
அதுவா ?

மழைக்கு முன்பு வரும்
மண்வாசனை போல
உனை சீண்டும் சமயம்
கன்னம் இரண்டும்
சிவப்பு பூசுமே
அதுவா ?

இதில் எதுவாயினும்
அது
அது தான்

ஒளிபுகா மொட்டுக்குள்ளே
உட்புகும் மழைநீரைப்போல
உன்னிலிருந்தே
உருவாகும்
அது
வெட்கமே தான் !


----> கவிதைகளின் நாயகன்  (ம.ராஜசேகரன்)


அழகு

எத்தனை முறை
எழுதி எழுதித் தீா்த்தாலும்
நித்தம் நித்தம்
புதிதாய் வெளிச்சமூட்டும்
நிலவும், மழையும் போல்
நின் அழகு

----> கவிதைகளின் நாயகன்  (ம.ராஜசேகரன்)

Photo: எத்தனை முறை
எழுதி எழுதித் தீா்த்தாலும்
நித்தம் நித்தம்
புதிதாய் வெளிச்சமூட்டும்
நிலவும், மழையும் போல்
நின் அழகு

- ராஜசேகரன்

குழந்தைக் கவிதை

கடற்கரையில்
வெகுநேரம் விளையாடிய
குழந்தை 
போனால் போகட்டுமென
விட்டுச்சென்றது
பெருங்கடலை !


----> கவிதைகளின் நாயகன்  (ம.ராஜசேகரன்)

Photo: கடற்கரையில்
வெகுநேரம் விளையாடிய
குழந்தை 
போனால் போகட்டுமென
விட்டுச்சென்றது
பெருங்கடலை !

~ ராஜசேகரன் ~
(https://www.facebook.com/KavithaikalinKathalan)

குழந்தைக் கவிதை

குழந்தை கட்டும்
கடற்கரை மணல்வீட்டில்
நிரந்தரமாக வசித்திடவே
வந்து வந்து கரைத்தொடுகிறது
கடலலை !

----> கவிதைகளின் நாயகன்  (ம.ராஜசேகரன்)

Photo: குழந்தை கட்டும்
கடற்கரை மணல்வீட்டில்
நிரந்தரமாக வசித்திடவே
வந்து வந்து கரைத்தொடுகிறது
கடலலை !

‍‍‍‍‍- ராஜசேகரன்

Monday, April 15, 2013

குழந்தைக் கவிதை

வேலை முடிந்து,
வீட்டிற்கு செல்லும் வழியில் 
நினைவு வந்தது, 
என் செல்லக் குழந்தையின் 
சின்ன வேண்டுகோள்...
"அப்பா... வரும் போது
டெடி பியர் பொம்மை வாங்கிட்டு வாங்க.."

அவசர அவசரமாக,
கடை, கடையாக ஏறி இறங்கினேன்..
எதுவும் என் செல்லத்திற்கு
பிடித்த மாதிரி இல்லை...

சில முறைத்தும்,
சில விறைத்தும்,
சில நீண்டும் ,
சில மாண்டும்,

என்ன செய்ய..?
என்ற குழப்பத்திலே
நொடி நகர, நகர..
நரகமாக...

ஒரு வழியாக கண்டேன்,
என் செல்லத்தின் செல்லத்தை..
தன்னை கொண்டுபோய்
சேர்த்துவிடு என்றபடி,
கைவிரித்து அழைத்தது...

டெடி பியர் வாங்கிய,
மகிழ்ச்சியோடு...
வீட்டிற்கு புறப்பட்டேன்..

வழியெங்கும் சந்தோஷம்,
வானில் தோரணம்..
கட்டிக் கொண்டிருந்தது...

"அய்ய்ய்...அப்பா...
டெடி பியர் எனக்காக...!"
என்றபடி கையின் இடுக்கில்..
பொம்மையைப் பிடித்தபடி,
கட்டிப்பிடித்து முத்தமிட்டது
குழந்தை...

மூச்சு முட்ட அன்பினில்,
மூழ்கி திளைப்பதை,
பொறாமையோடு,
பார்த்துக்கொண்டிருந்து
பொம்மை...!!!

உணவு முடிந்து,
உறக்கம் முடிந்து,
எழுந்தேன்

டெடி பியர் ஷோகேஸில்
இருந்தது...!!

குழந்தையை அழைத்துக் கேட்டேன்..
"என்னடா செல்லம்...
டெடி பியர் கூட விளையாடலையா...
அங்க வச்சுட்ட...?"
என்றேன் ஆச்சர்யமாக...

"அப்பா...
டெடி பியர் உன்னை போல
இல்லப்பா...
நான் முத்தாக் கொடுத்தா...
பதிலுக்கு முத்தா தரமாட்டிக்குது..."
என்று சொல்லிவிட்டு
கன்னத்தில் முத்தமிட்டது குழந்தை...
என் முத்தத்தை எதிர்நோக்கி...

கதவினிடுக்கு வழியே,
தெறிக்கும் மழைச்சாரல்,
முகத்தில் பட்ட சந்தோஷத்தில்...
குழந்தைக்கு மாறி மாறி
மாரியாக கன்னத்தில் முத்தமிட்டேன்...!!!


----> கவிதைகளின் நாயகன்  (ம.ராஜசேகரன்)




Thursday, March 28, 2013

பிரிவுக்குப் பின்

நீ நடந்த
சாலையில்,
நான் தவறவிட்ட
புன்னகையை,
சேகரிக்கிறேன்...
உன் பிரிவுக்குப் பின்...


- கவிதைகளின் நாயகன் (M.Rajasekaran)



Photo: நீ நடந்த
சாலையில்,
நான் தவறவிட்ட
புன்னகையை,
சேகரிக்கிறேன்...
உன் பிரிவுக்குப் பின்...

குழந்தைக் கவிதை

குழந்தைகளிடம் பழகிப் பாருங்கள்,
பொம்மைகளின் கூட்டத்தில்,
மிகவும் பிடித்த,
பொம்மையாக நாமும் இருக்கலாம்...!!!

- கவிதைகளின் நாயகன் (M.Rajasekaran)


Photo: குழந்தைகளிடம் பழகிப் பாருங்கள்,
பொம்மைகளின் கூட்டத்தில்,
மிகவும் பிடித்த,
பொம்மையாக நாமும் இருக்கலாம்...!!!

- கவிதைகளின் காதலன் (ம.ராஜசேகரன்) (https://www.facebook.com/KavithaikalinKathalan)

முகமூடி

முகமூடி
================
எங்கிருந்து கழட்டி வீசப்பட்டதோ,
தெரியவில்லை..
எனக்கு சரியாக இருக்கிறது..!!
இருந்தும்..!
எனக்கான ஒன்றைத் 
தேடித் தேடியே களைத்துப்போகிறேன்...
என்னுடையதை தொலைத்துவிட்டு...!!

- கவிதைகளின் நாயகன் (M.Rajasekaran)



Photo: முகமூடி
================
எங்கிருந்து கழட்டி வீசப்பட்டதோ,
தெரியவில்லை..
எனக்கு சரியாக இருக்கிறது..!!
இருந்தும்..!
எனக்கான ஒன்றைத் 
தேடித் தேடியே களைத்துப்போகிறேன்...
என்னுடையதை தொலைத்துவிட்டு...!!

நினைவுகள்

எத்தனை முறை,
உதறித் தள்ளினாலும்,
மீண்டும், மீண்டும்,
கரம் பிடிக்கும்,
குழந்தையைப் போல,
உன் நினைவுகள்...!!!

- கவிதைகளின் நாயகன் (M.Rajasekaran)


Photo: எத்தனை முறை,
உதறித் தள்ளினாலும்,
மீண்டும், மீண்டும்,
கரம் பிடிக்கும்,
குழந்தையைப் போல,
உன் நினைவுகள்...!!!

குழந்தைக் கவிதை


"யானை எப்படிமா விழுந்துச்சு ??" என்ற கேள்விக்கு,
"யானை டம்முன்னு விழுந்துச்சு.." என்று
சொல்லி சிரிக்கும் குழந்தைக்காகவே,
யானை இன்னும்,
பலமுறை விழுந்திருக்கலாம்
என்று தோன்றுகிறது...!!!

Photo: "யானை எப்படிமா விழுந்துச்சு ??" என்ற கேள்விக்கு,
"யானை டம்முன்னு விழுந்துச்சு.." என்று
சொல்லி சிரிக்கும் குழந்தைக்காகவே,
யானை இன்னும்,
பலமுறை விழுந்திருக்கலாம்
என்று தோன்றுகிறது...!!!

நிகழவில்லை

கண்ணே நீ ஒவ்வொருமுறை தொடும்போதும்,
என்னுள்...
ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கவில்லை..!
ஆயிரம் வீணைகள் வாசிக்கப்படவில்லை..!
கடல் அலைகள் ஆா்ப்பரிக்கவில்லை..!
புயல் தென்றலாய் மாறவில்லை..!
இன்னும்... இன்னும்...
எந்தவொரு அதிசயமும் நிகழவில்லை..!!
நீ எப்போது மீண்டும் தொடுவாய் என்ற நினைப்பைத் தவிர...!!!

Photo: கண்ணே நீ ஒவ்வொருமுறை தொடும்போதும்,
என்னுள்...
ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கவில்லை..!
ஆயிரம் வீணைகள் வாசிக்கப்படவில்லை..!
கடல் அலைகள் ஆா்ப்பரிக்கவில்லை..!
புயல் தென்றலாய் மாறவில்லை..!
இன்னும்... இன்னும்...
எந்தவொரு அதிசயமும் நிகழவில்லை..!!
நீ எப்போது மீண்டும் தொடுவாய் என்ற நினைப்பைத் தவிர...!!!

குதூகலிப்பு

பலூன் விற்பவரைக் கண்ட,
குழந்தையைப் போல,
உனைக் கண்டதும்,
குதூகலிக்கிறது,
என் மனது...!!

----> ம.ராஜசேகரன்


Photo: பலூன் விற்பவரைக் கண்ட,
குழந்தையைப் போல,
உனைக் கண்டதும்,
குதூகலிக்கிறது,
என் மனது...!!

----> ம.ராஜசேகரன்

Saturday, March 23, 2013

கிராமத்து பெண் கவிதை...?!

கிராமத்து பெண் கவிதை...?!
-------------------------------------
ஊரடங்குற வேளையில,
உன் ஆசை அடங்கலையே..!

பேரெடுத்த மச்சான் முன்ன..
சீரெடுத்து வச்சேன் கண்ணு..!

கட்டிக்காத்த என் மனச,
தட்டிப்பறிச்சு போறதென்ன சொல்லு...!

விட்டுவிட்டு விழுந்த மனசு,
சிட்டுக்குருவி ஆனதென்ன சொல்லு..!

பொழுது சாயுற வேளையில நெஞ்சு,
பழுது பார்க்க வார மச்சான்..!
விழுது போல வளா்ந்த ஆசைய,
தொழுது போக தொடங்கி வச்சான்..!!!

Friday, March 22, 2013

முட்கள்

ரோஜாக்கள் விற்கும்,
சிறுமிகளுக்கு,
முட்கள் குத்துவதில்லை...!
முட்களிடையே தான்...!
ரோஜாக்கள் குத்துகின்றன...!!!