உந்தன் விரல் தொடும் சாக்கில் லேசாக கரம் நுழைப்பேனே உடனே சட்டென்று பின்னுக்கு இழுத்து உதடு சுழித்து புன்னகை சிந்துவாயே அதுவா ? யாருமற்ற வேலைகளில் உன் இடை தொடும் வளையலில் என் விரல் படும் சமயம் உனைமறந்து என் கரத்தினையும் சேர்த்து முகம் மறைப்பாயே அதுவா ?
மழைக்கு முன்பு வரும் மண்வாசனை போல உனை சீண்டும் சமயம் கன்னம் இரண்டும் சிவப்பு பூசுமே அதுவா ?
இதில் எதுவாயினும் அது அது தான்
ஒளிபுகா மொட்டுக்குள்ளே உட்புகும் மழைநீரைப்போல உன்னிலிருந்தே உருவாகும் அது வெட்கமே தான் ! ----> கவிதைகளின் நாயகன் (ம.ராஜசேகரன்)
வேலை முடிந்து, வீட்டிற்கு செல்லும் வழியில் நினைவு வந்தது, என் செல்லக் குழந்தையின் சின்ன வேண்டுகோள்... "அப்பா... வரும் போது டெடி பியர் பொம்மை வாங்கிட்டு வாங்க.."
அவசர அவசரமாக, கடை, கடையாக ஏறி இறங்கினேன்.. எதுவும் என் செல்லத்திற்கு பிடித்த மாதிரி இல்லை...
சில முறைத்தும், சில விறைத்தும், சில நீண்டும் , சில மாண்டும்,
என்ன செய்ய..? என்ற குழப்பத்திலே நொடி நகர, நகர.. நரகமாக...
ஒரு வழியாக கண்டேன், என் செல்லத்தின் செல்லத்தை.. தன்னை கொண்டுபோய் சேர்த்துவிடு என்றபடி, கைவிரித்து அழைத்தது...
டெடி பியர் வாங்கிய, மகிழ்ச்சியோடு... வீட்டிற்கு புறப்பட்டேன்..
குழந்தையை அழைத்துக் கேட்டேன்.. "என்னடா செல்லம்... டெடி பியர் கூட விளையாடலையா... அங்க வச்சுட்ட...?" என்றேன் ஆச்சர்யமாக...
"அப்பா... டெடி பியர் உன்னை போல இல்லப்பா... நான் முத்தாக் கொடுத்தா... பதிலுக்கு முத்தா தரமாட்டிக்குது..." என்று சொல்லிவிட்டு கன்னத்தில் முத்தமிட்டது குழந்தை... என் முத்தத்தை எதிர்நோக்கி...
கதவினிடுக்கு வழியே, தெறிக்கும் மழைச்சாரல், முகத்தில் பட்ட சந்தோஷத்தில்... குழந்தைக்கு மாறி மாறி மாரியாக கன்னத்தில் முத்தமிட்டேன்...!!! ----> கவிதைகளின் நாயகன் (ம.ராஜசேகரன்)